எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 25, 2013

பேரியல் அஷ்ரபை இலங்கைக்கு மீள அழைக்குமாறு பொதுபல சேனா அறைகூவல்

Print Friendly and PDF


சிங்கப்பூர் தூதுவராக கடமையாற்றும் பேரியல் அஷ்ரபை மீள அழைக்குமாறும் ஞானதேரர் அரசாங்கத்திடம் அறைகூவல் விடுப்பதாக கூறினார். இன்று ஹர்த்தால் நாடத்தும் கடைகளை நிரந்தரமாக முடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் பொதுபலசேன தேரர் தெரிவித்தார்.

நேற்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட ஞானாசார தேரர் பாணந்துறையில் நடத்திய கூட்டத்தில் தெரிவித்த கருத்து நேற்று இரவு சுவர்வாஹினி, ஹிரு ரீ.வி.களில் இன்றைய சிங்கள பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இரண்டு கொள்கலனில் ஆயுதங்கள் கொண்டு வந்தாக ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கப்பூரில் தூதுவராக கடமையாற்றும் பேரியல் அஷ்ரப் பௌத்தர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அங்கு வாழும் பொளத்தர்கள் ஆதராபூர்வமாக பொதுபல சேனாவுக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மலரவிருக்கும் புத்தாண்டை சிங்களப் புதுவருடம் என கொண்டாட வேண்டாம். இலங்கையின் புதுவருடம் எனக் கொண்டாடுங்கள் எனச் பேரியல் சொல்லியிருக்கின்றார். இலங்கையின் சுதந்திர நிகழ்வின்போது சிங்கள பாடல்களை இசைக்கா வேண்டாம் எனச் சொல்லி தடை விதித்துள்ளதாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறையில் தெரிவித்தார்.

(அஸ்ரப் ஏ சமத்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2