எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 26, 2013

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெறுமதியான மரக்கற்றிகள் பொலிஸார் வசம்

Print Friendly and PDF


மட்டக்களப்பு வாழைச்சேனையில் சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி அறுவைக்கு கொண்டு செல்லப்பட்ட பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகளை விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். இவை 25 துண்டுகளைக் கொண்ட சுமார் ஜந்து இலட்சம் பெறுமதி வாய்ந்தென கூறப்படுகிறது.


இவை புணாணை காட்டுப்பகுதியில் இருந்து ஓட்டமாவடி பஜார் பள்ளியடிக்கு வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் திங்கள்கிழமை அதிகாலை வேளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எஸ்.ஜ.மாயாரஞ்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சென்று இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இவ்வியாபாரமானது நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் இம்முறையே இவர்கள் விசேட பொலிஸ் பிரிவினரிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2