Published On: Thursday, April 11, 2013
தமிழக திரையுல உண்ணாவிரத போராட்டத்திற்கு இலங்கையில் பதிலடி

தமிழ் நாட்டில் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலக பட்டாளம் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திடசங்கற்ப பூஜை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (11) மாலை 4.30 மணிக்கு இந்த திடசங்கற்ப பூஜை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற உள்ளது.
இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
"உண்மையை நேரில் காண்பதற்கு வாருங்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் இத்திடசங்கற்ப பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.