எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, April 07, 2013

வீட்டுத் திட்டத்தின் 2ஆம் கட்டமாக இந்தியா 100 கோடி ரூபாவை வழங்கியது

Print Friendly and PDF


இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் கோடி செலவில் 43 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்படி இலங்கையின் வடக்கு மாகாணங்களில் 39 ஆயிரம் வீடுகளும், கிழக்கு மாகாணங்களில் 4 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது.

இந்த திட்டத்தினை செயல்படுத்த இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 2013, 2014ஆம் நிதியாண்டில் 375 கோடி இந்திய ரூபா செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 100 கோடி இந்திய ரூபா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில்  பயனாளரே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும்.

இதற்கான தொகை பயனாளரிடம் நேரடியாக வழங்கப்படும். இலங்கையில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய வங்கிகளின் வாயிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது.

(சென்னையிலிருந்து சாஹுல்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2