எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 09, 2013

கிழக்கிலும் மாளிகாவத்தையிலும் ஜிஹாத்: சாடுகிறது சிங்களப் பத்திரிகை

Print Friendly and PDF


கிழக்கிலும் மாளிகாவத்தையிலும் ஜிகாஹாத் அமைப்பில் 150 பேர் வெளிநாட்டில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக திவமின பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 07ஆம் திகதியான வெளியான திவமின சிங்களப் பத்திரிகையில் அமெரிக்க வீக்கிலீக்ஸ் தகவல் எனும் அரைப்பக்கத்தில் கீர்த்தி வர்ணகுலசுரிய என்பவர் எழுதிய கட்டுரையில் இத்தகவல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலும் மாளிகாவத்தையிலும் ஜிஹாத் அமைப்பில் 150 முஸ்லிம்கள் வெளிநாட்டில் ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளதாகவும். அதற்காக வாமி எனும் இயக்கம் சவூதி ஆரேபியா அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தௌஹீத் ஜமாஆத், ஜாமாஆதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் ஆகிய அதிதீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலிகளின் கருணா அம்மானிடம் வேறு இயக்கங்கள் ஆயுதம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் பெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா ஆகியோரையும் சம்பந்தப்படுத்தி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

முஜிபுர்ரஹ்மான் மாளிகாவத்தையில் இயங்குவதாகவும் இவர்கள் பாதாளகோஸ்டியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயமாக வீக்கிலீக்கின் ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தியையும் அக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சதாம், ஜிஹாத், ஒசாம் ஆகிய பெயர்களில் பள்ளிவாசல்களில் முகாம்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியா உள்ள அரபியையும் இலங்கை அரசியல்வாதி ஒருவர் சந்தித்து பேச்சுவாத்தை நடத்துவது போன்ற நிழற்படமும் இக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வாமி, ஜ.ஜ.ஆர்.ஓ, அல்சாபி. ஆசியன் யுத் பெட்ரேசன் ஆகிய நிறுவனங்களின் முகவரிகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

(அஸ்ரப் ஏ சமத்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2