Published On: Tuesday, April 30, 2013
மேதினத்தில் புதிய மின்கட்டணத்தை ஜனாதிபதி அறிவிப்பார்: விமல் வீரவன்ச
வடக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த முஸ்லிம், சிங்கள மக்களை விடுதலைப்புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இனரீதியாக இதனைச் சிந்திக்கின்றனர். தமிழ் மக்களுக்கு மட்டுமே வடக்கு மாகணாம் பூர்விகநிலம் என சொந்தம் கொண்டாடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்களது அரசியல் இலாபத்திற்காகவே தமிழ் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். காலத்திற்கு காலம் தேர்தல்கள் வரும்போது நிகழ்ச்சி நிரலில் இனரீதியன செயற்பாடுகளில் ஈடுபடுவது. ஆனால், வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மேல்மாகாணத்தில் எந்தப் பகுதியிற்கும் சென்று குடியேறி வாழக்கூடிய சமாதான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஏன் வடக்கில் மட்டும் 20 வருடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும்போது இவர்கள் இனரீதியாகச் சிந்தித்து இனகுரோதங்களை மீண்டும் தமிழ்மக்களிடையே தூவி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரவித்தார்.
பிலியந்தலையில் உள்ள மத்திய மஹா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாவட்டத்தில் வாழும் 1000 வறிய குடும்பங்களுக்கு 175 மில்லியன் ருபா நிதியினை வீடமைப்புக் கடனாக வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அமைச்சர் விமல் வீரவண்ச தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; அமெரிக்கா நாட்டின் தூதுவர் அண்மையில் காலிமுகத்திடலில் குப்பை பொறுக்கும் காட்சிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அவருக்குரிய வரம்புக்குள் நில்லாமல் அவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் முக்கிய உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து இரகசிய பேச்சுவார்த்தை நடாத்துகின்றார். மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களை பிரிப்பதற்கே துணைபோகின்றார். கிழக்கு மாகணாத்தில் உள்ள மாகணசபையில் உள்ள ஆட்சியை பிரித்து தமிழ்த் தேசிய முன்னணியின் கூட்டாச்சியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்றார்.
அதேபோன்று வடக்கு மாகாணசபையை தமிழ்த்தேசிய முன்னணி ஆட்சியை கொண்டுவருவதற்கும் அமெரிக்கா தூதுவர் செயற்படுகின்றார். இந்த நாட்டை முழுக்க குப்பை மேடாக்குவதற்கே அவர் முயற்சித்து வருகின்றார். நிதியமைச்சின் செயலாளர் டி.பி. ஜயசுந்தர மிண்சார கட்டண அதிகரிப்பின் புதிய வரைபு திட்டத்தினை உருவாக்கியவர். ஜயசுந்தர போன்றவர்களுக்கு. ஏழை மக்களின் பசி பட்டினி விளங்குவதில்லை. இம்மக்கள் பற்றி ஒரு சிறிதளவேனும் அன்பு கருனை இல்லாதவர்.
மின் கட்டண அதிகரிப்பை மீளமாற்றம் செய்து குறைந்த வீட்டுப் பவானையாளர்களான ஏழை மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் மின்கட்டனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏழை மக்களுக்கு நன்மை பயக்கூடியதொரு திட்டத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்திற்கொண்டு மேதினத்தில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பதகாவும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.
(அஸ்ரப் ஏ சமத்)