Published On: Tuesday, April 30, 2013
திருகோணமலையில் மூன்று நாட்களின் பின்னர் முதியவரின் சடலம் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசத்தில் மூன்று நாட்களாக மரத்தடியில் உயிரிழந்து கிடந்த வயோதிபரின் சடலத்தை இன்று வெருகல் பொலிஸார் மீட்டனர். வெருகல் பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த 76 வயதுடைய பொன்னையா அரசரெட்ணம் என்பவரே இவ்வாறு உயிழந்தவராவார்.
இன்று செவ்வாய்கிழமை அவ்வழியால் வந்த சிறுமி மேற்படி முதியோர் ஊதிப் பெருத்த நிலையில் தென்னங் கன்றுகளின் கீழ் மரணித்துக் கிடப்பதை அறிந்து தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெருகல் பொலிஸாரும் சடுதி மரண விசாரணை அதிகாரியும் ஸ்லத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த வயோதிபர் தனியாக குச்சிக் குடிசையில் வசித்து வந்ததாகவும், கடைசியாக ஞாயிற்றுக்கிமையன்று காட்டுக்குச் சென்று விறகெடுத்து வந்து குளித்து விட்டு அவ்விடத்தில் தூங்கியதைத் தாம் கண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலையணையில் படுத்தவாறே சடலம் தென்னங் கன்றுகளின் அடியில் காணப்பட்டது. ஊதிப்பெருத்த நிலையில் புழுக்கள் நிறைந்து காணப்பட்ட சடலம் விசாரணையின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
(குகதர்சன்)