Published On: Thursday, April 18, 2013
செங்கலடி இரட்டக்கொலையின் பின்னணியில் மாணவியின் காதல் விவகாரம்
செங்கலடி நகர வர்ததகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த மாணவிக்கும் மாணவனொருவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஒழுக்க கேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த மாதம் இந்த ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினருக்கு பல்வேறு உத்தவுகளைப் பிறப்பித்திருந்தேன்.

மாணவர்கள் விடும் ஒழுக்கக் கேடுகள் பற்றி சுட்டிக்காட்டினாலும் பாடசாலை நிர்வாகம் அதனை மூடிமறைப்பதற்கே முற்படுகிறது. இதன் விளைவாகவே குறித்த கொலைச் சம்பவம் பலரும் கூறுவதை மறுக்க முடியாத நிலையே உள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிர்வாக ரீதியான விசாரணைகள் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் ஆசியர்கள் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பாடசாலை சமூகத்துடன் இதுபற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.

இந்த பாடசாலையைப் பொறுத்தவரை புதிய மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கமைய 7 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திறகு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
(குகதர்சன்)
(குகதர்சன்)