Published On: Thursday, April 18, 2013
கல்முனையில் பொதுபல சேனாவின் அலுவலகம் அமைப்பதற்கு திட்டம்

பொதுபல சேனா தனது அலுவலகம் ஒன்றை கல்முனையில் திறக்கவுள்ளதாக அதன் உயர்பீட உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பொதுபல சேனாவின் முக்கிய உறுப்பினர்கள் நாடுதிரும்பிய பின்னர் இந்த அலுவலகம் திறக்கப்படுமென அவர் மேலும் கூறினார்.
சில தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானத்துக்கு சவால் விடுக்கும் வகையிலேயே இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து டிலந்த விதானகேயிடம் துருவம் சார்பாக தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அதனை மறுத்தார். இந்த செய்திக்கும் பொதுபல சேனாவுக்கு எந்தவித தொடர்புமில்லை என தெரிவித்தார்.