எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, April 22, 2013

அட்டாளைச்சேனை, பாலமுனை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Print Friendly and PDF


அட்டாளைச்சேனை, பாலமுனை கடற்கரைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க இப்பெண்ணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.


இச்சடலத்தைப் பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் ரீ. சரவணராஜா சடலம் அடையாளம் காணும்வரையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்குமாறுமாறு பணித்துள்ளார்.

இச்சடலம் பற்றிய விபரம் பொதுமக்களிடத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சடலத்துக்கு உரிமை கோருபவர்கள் அக்கரைப்பற்று பொலிஸாருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 



(பி.முஹாஜிரீன்,  எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2