எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, April 03, 2013

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் நிதியம் அமைப்பதற்கு ஜப்பான் உதவி

Print Friendly and PDF


கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பெண்கள் நிதியம் ஒன்றை அமைத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் நாடு உதவவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜிதின் காரியாலயத்தில் கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக சந்தித்து கலந்துரையாடிய ஜப்பானிய பிரதித் தூதுவர் கிரோகி இசுகா மற்றும் அதிகாரிகளும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாரலின் போது கிழக்கு மாகாணத்தில் 1983 ஆம் ஆண்டிற்கு பின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மறுவாழ்வு அளிக்கும் முகமாக பெண்கள் நிதியம் ஒன்றை நிறுவி உதவி புரிவதற்கு ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் பிரதித்தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன. மேற்படி திட்டம் உயர்ந்த நிலையில் வெற்றி கண்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் இப்பயிற்சி நெறியை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண தவிசாளர் ஆர்யவதி கலபதி, மாகாணசபை செயலாளர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2