எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, April 04, 2013

கிழக்கு மாகாணசபை அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

Print Friendly and PDF


கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்கள் பின்வருமாறு;


01. நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் காணி வழங்கல்.

நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் அமன்தா பீச் ரிசோட் தனியார் நிறுவனத்திற்கு 0.4805 ஹெக்டெயர் பரப்புடைய காணியை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. விமலவீர திஸாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரம் தொடர்பாக ஆராய்ந்து அமைச்சர் வாரியம் 13 ஆம் திருத்த சட்டத்திற்கு அமைய நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் காணியை வழங்குவதற்கு அனுமதியை வழங்கியது.

02. சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கான நிதி

சிறுவர் இளம்பராய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக நீதி மன்றத்தினால் சரியான தீர்மானம் எடுக்கும்வரை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் செயற்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கு ஆளணிக்கு மேலதிகமாக இருவரை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கான அனுமதியையும், சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கான மாதாந்த செலவினத்தையும் வழங்குவதற்கான அனுமதி தொடர்பாக சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை ஆளணி இருவரை நியமிப்பதற்கும், சிறுவர் இல்லங்களில் ஏற்படும் மாதாந்த செலவினங்களை வழங்குவதற்கும் அனுமதியை வழங்கியது.

03. ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் சேவைபுரியும் வைத்தியர்களின் சேவைக்காலத்தை  ஒரு வருடம் நீடித்தல்

திருகோணமலை கப்பல்துறை, மகா ஓயா, நாவலடி, நிந்தவூர், ஏறாவூர், புதுக்குடியிருப்பு, பதவிசிறிபுர, கிண்ணியா ஆகிய ஆயுள்வேத வைத்தியசாலைகளிலும் கிளிவெட்டி, பதியத்தலாவ ஆகிய கிராமிய வைத்தியசாலைகளிலும்; ஒப்பந்த அடிப்படையில் கடமைபுரியும் ஆயுள்வேத வைத்தியர்களின் சேவைக்காலம் முடிவுறுவதனால் அவர்களின் சேவையை மேலும் ஒரு வருடம் நீடிக்க சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்ரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது.

04. கிழக்கு மாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகார சபைக்கான பஸ் வண்டி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் கிழக்கு மாகாண போக்குவரத்து சேவைக்கு தேவையான சாரதிகளை பயிற்றுவிப்பதற்கான பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் 4 மில்லியன் நிதி ஒதுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியது.


05. நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தல்.

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்டு இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது.

06. கிழக்கு மாகாண அரச நிறுவனங்களுக்கு இடையிலான உற்பத்தி திறன் போட்டி - 2013 

தேசிய மட்டப்போட்டியில் பங்கு பற்றிய கிழக்கு மாகாண நிறுவனங்கள் சில வெற்றிகள் பெற்றுள்ளன. இவ்வாறான நிறுவனங்களையும் சில முறைமைகளின் கீழ் தயார்படுத்தி பயன்மிகு வகையில் சேவைகளை மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபையின் சகல நிறுவனங்களினதும் பங்களிப்புடன் உற்பத்திதிறன் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்வதற்காக அமைச்சரவையின் அங்கிகாரத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தினால்  சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராயந்;த அமைச்சரவை கிழக்கு மாகாண அரச நிறுவனங்களுக்கு இடையிலான உற்பத்தித்திறன் போட்டி ஒன்றை நடாத்த அனுமதி வழங்கியது.

07. கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டில் கீழ் மூவின மக்கள் வாழும் கிராமங்களை இனங்கண்டு ஜெய்கா திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல்.

கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் மூவின மக்கள் வாழும் கிராமங்களை இனங்கண்டு அப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்திப் பணிகள் நீர்பாசனத் திட்டங்கள் நீர் வழங்கல் திட்டம் மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஜெய்கா திட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்படவுள்ள கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் பின்வரும் கிராமங்கள் அடையாளப்படுத்தப்படவுள்ளது.

* அம்பாறை மாவட்டம்
1. நாவிதன்வெளி
2. பதியத்தலாவ
3. அக்கரைப்பற்று
4. இறக்காமம்
5. சம்மாந்துறை
6. பொத்துவில்
7. ஆலயடிவேம்பு
8. உகன 

* மட்டக்களப்பு மாவட்டம்
1. போரைத்தீவுப்பற்று மேற்கு
2. கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி)
3. மண்முனைப்பற்று
4. ஏறாவூர் பற்று
5. ஏறாவூர்
6. களுவாஞ்சிகுடி - களுதாவளை

* திருகோணமலை மாவட்டம்
1. மூதூர்
2. பதவிசிறிபுர
3. வெருகல்
4. கிண்ணியா 
5. கோமறங்கடவெல 
6. தம்பலகாமம்

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2