Published On: Thursday, April 11, 2013
ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பற்றி சிந்திக்காமல் பதவிக்கு ஆசைப்பட்டார்: விக்கிலீக்ஸ்

2002ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆஸ்லே வில்ஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் வடிவத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் ''ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை எனவும் அவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே எந்நேரமும் குறியாய் செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலில் முன்னால் தென்கிழக்கு பல்கலைக் கழக உதவி வேந்தருடைய விமர்சனங்கள் உள்வாங்கப் பட்டிருந்தது.
புலிகளின் எழுச்சி குறித்து முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பணியாற்றி வருகின்றனர். அண்மையில் தென்கிழக்கு பல்கலையில் ஒரு கூட்டம் நடை பெற்றது. அதில் புலிகள் மெதுவாக கிழக்கு முழுவதையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஒரு அணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை மற்றும் துயரங்கள் தொடர்பில் அரசு கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தென்கிழக்கு பல்கலையின் உப வேந்தர் எம்.எல்.ஏ.காதர் உறுதியாக இருந்தார். முஸ்லிம்களை புறக்கணித்து புலிகளுக்கு எந்தவொரு விலையினையும் செலுத்தி சமாதானத்தை மேற்கொள்ள அரசு தயாராக இருந்தது. ஹக்கீம் தொடர்பில் உப வேந்தர் காதர் கடும் விமர்சனங்களை கொண்டிருந்ததாக குறித்த தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் வருமாறு;
C O N F I D E N T I A L SECTION 01 OF 04 COLOMBO 002133
SIPDIS
DEPARTMENT FOR SA, SA/INS, S/CT; NSC FOR H. THOMAS;
LONDON FOR POL/RIEDEL
E.O. 12958: DECL: 11-14-12
TAGS: PGOV PTER PHUM MOPS ECON SOCI CE LTTE
SUBJECT: Tigers gradually expand network of control in
the east, as security forces watch and Muslims fret
Refs: (A) Colombo 2101
- (B) Colombo 1180, and previous
(U) Classified by Ambassador E. Ashley Wills. Reasons
1.5 (b, d).
=================
Deep Muslim Anger
=================
¶10. (C) (((Note: The U.S. team repeatedly asked
interlocutors about continuing reports of Muslim
extremism in the east. Most observers had little clear-
cut information about the matter and Muslim
interlocutors denied it was a factor. Nonetheless, the
team did notice many new mosques under construction and
various "Islamic foundation" offices operating in Muslim
towns. It is hard to see how eastern Muslims could
afford to pay for the construction of all the new
mosques, so it would seem possible that Middle Eastern
money is coming in, as some claim. When queried, Sri
Lankan security forces replied that they had not seen
any Arabs or Pakistanis visiting the region. GSL
officials added that they just were not sure what was
going on in Muslim areas, however. They had heard of
small extremist groups with names like "Jihad" and
"Osama" operating in the east, but did not think they
were much of a threat to the peace. Pro-LTTE Tamils
that the team met with repeatedly claimed that Muslims
were radicalized, and armed and dangerous. One pro-LTTE
figure, V. Kamaladas, the head of a local NGO Forum for
the east, basically indicated that the U.S. and the LTTE
should join together to defeat the Muslims! End
Note.)))
WILLS
(விடிவெள்ளி)