Published On: Wednesday, April 03, 2013
யாழ். மாவட்டத்தில் குறுங்கால பயிற்சிநெறிக்கான விண்ணப்பம்கோரல்

யாழ். மாவட்டத்தில் ஹோப் சிறிலங்கா அமைப்பு பல்வேறு குறுங்கால பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் யாழவன் நஸீர் தெரிவித்தார். இப்பயிற்சி நெறி மாணவர்கள், இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் தலைமைத்துவ பயிற்சி, நல்லொழுக்க பயிற்சி உள்ளிட்டவைகள் உள்ளடங்கும். மேலும் பெற்றோர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு (குடும்பக் கல்வி) என்பன இடம்பெறும். இவை பொதுவாக கிழமைநாள் மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும். மேற்குறித்த பயிற்சிநெறி யாவும் சான்றிதழ் பயிற்சி நெறியாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்வருவோரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தலைவர், யாழவன் நஸீர், இல. 103 முஸ்லிம்ம் கல்லூரி வீதி, யாழ்ப்பாணம். தொ.பே. இல: 0779066200, ஆர்.சுவர்கான், நிர்வா நம்பிக்கையாளர் 0711144286
(பாறூக் சிகான்)