எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, April 03, 2013

மாவை சேனாதிராஜா யாழ். முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடினார்

Print Friendly and PDF


யாழ். முஸ்லிம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


இச்சந்திப்பு யாழ். முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில்  இன்று முற்பகல்  10 மணியளவில்  நடைபெற்றது. இதன்போது முஸ்லிம்களின் சார்பாக சியானாஸ் தாஹீர், அஸ்ஸெய்க் அஸ்மின் அய்யூப் மக்களின்  மீள்குடியேற்றம் தொடர்பாகவும்,தற்போது சிறுபான்மை யினருக்கு எதிரான நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்து கூறினர்.

இதன் போது பதிலளித்து பேசிய  பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முஸ்லீம் உறவின் முக்கியத்துவம்,மீள்குடிறேற்ற விடயத்தில் தமிழ், முஸ்லிம்களுக்கிடையிலான பிரச்சினைகளை களைவதற்கு முன்னின்று செயற்பட தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.


சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவர் கே.எம் நிலாம்,யாழ் முஸ்லிம் உதவும் கரங்கள் உறுப்பினர்கள், த.தே.கூ. செயலாளர் சிவஞானம், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கனகசபை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(பாறூக் சிகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2