Published On: Wednesday, April 03, 2013
இலங்கை தமிழர்களுக்காக டில்லியில் நடத்திய டெசோ கூட்டம் தோல்வி
தமிழக சட்டசபையில் அமைச்சர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை நடந்த கூட்டத்தில் சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு அமைச்சர் வளர்மதி பதில் அளித்து பேசினார்.
அப்போது இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. டில்லியில் நடத்திய டெசோ கூட்டம் தோல்வியடைந்தது என்றார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அமைச்சரின் கருத்தை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சபையில் கூச்சல் நிலவியது.
அமைச்சரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து ஸ்டாலின் பேசுகையில், சமூக நலத்துறைக்கும் டெசோ மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் என தெரியாமல் அமைச்சர் பேசுகிறார் என்றார்.
(சென்னையிலிருந்து சாஹுல்)
