எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 02, 2013

யாழ். குருநகர் தொடர்மாடி தொடர்மாடி புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Print Friendly and PDF


யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை அமைச்சர் விமல் வீரவன்சவினால் ஆம்பித்துவைக்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டம் மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் ஐனசெவன எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றது. 


கடந்தகால யுத்தத்தின்போது யாழ்ப்பாணத்தில் குருநகரில் 5 மாடிகளைக் கொண்ட 160 குடியிருப்புக்களைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்புத் திட்டத்தில் உள்ள கட்டிடங்கள், மற்றும் அடிப்படை வசதிகள், முற்றுமுழுதாக சேதமடைந்து காணப்படுகின்றது. இக்கட்டிடம் கட்டிடங்களும் கழிவுநீர், மலசலகூட குழிகள், நீர்த்தாங்கிகள் சேதமடைந்து காணப்படுகின்றது.
  

இவ்வீடமைப்புத்திட்டம் 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள 160 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடியும் உயர்ந்த 5 மாடிகளைக் கொண்ட கட்டிடம் குருநகராகும். இத்திட்டத்தில் 8 கட்டிடங்கள்  அடங்குகின்றன.

அமைச்சர் விமல் வீரவன்சவின்சவின் வேண்டுகோளுக்கிணங்க வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை புனர்நிர்மாணப் பணிகளுக்கு ரூபா 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 9 மாத காலத்திற்குள் பூரணப்படுத்தப்பட்டு மீள மக்களிடம் கையளிக்கப்படும் என வீடமைப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் பிரசாத் மன்சு தெரிவித்தார்.


இவ்வீடமைப்புத் திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,  மற்றும் யாழ். மாவட்ட  அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(அஸ்ரப் ஏ. சமத்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2