எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, May 14, 2013

மகளை 'அம்மாவாக்கிய' தகப்பன்; முந்தலில் சம்பவம்

Print Friendly and PDF


13 வயதான தனது  மகளை தந்தையொருவர் கர்ப்பமாக்கிய சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில்   குறித்த சிறுமியின்  தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கு தொடுவாவ பிரதேசத்தில் வதியும் குறித்த சிறுமி கடந்த 04 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாகவிருந்த போது அவரின் தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளின் நடவடிக்கையில் மாற்றத்தினை உணர்ந்த  தாய், மகளிடம் அது குறித்து விசாரித்த போது  சிறுமி கர்ப்பமடைந்துள்ளதினை அறிந்துள்ளார்.

இதேவேளை, வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் யாருக்காவது தெரிவித்தால் கொன்று விடுவேன் என தந்தை அச்சுறுத்தியமையால் தான் இதுதொடர்பில் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2