Published On: Tuesday, May 14, 2013
கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்
கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் அண்மையிலிருந்த வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதல் காரணமாகப் பள்ளிவாசலுக்கும் வர்த்தக நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இது தொடர்பில் இருவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியோர் மது போதையில் காணப்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.