எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, May 19, 2013

வாழைச்சேனையில் சட்டவிரோத மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Print Friendly and PDF


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த முதிரை மரக்குற்றிகளையும், உழவு இயந்திரத்தினையும் வாழைச்சேனை பொலிஸார் சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.


வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் பெரேராவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியும், சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரியுமான எல்.அமரசேகர தலைமையில் சென்ற குழுவினர் இருபத்தெட்டு முதிரை மரக்குற்றிகளையும், உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மரங்களை உழவு இயந்திரத்தில் ஏற்றிய நிலையில் பொலிஸாரை கண்டதும் சட்டவிரோத மரங்களை விற்பனை செய்யும் கும்பல் தம்பி ஓடி விட்டதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2