எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, May 27, 2013

கணவனுடன் தகராறு: இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் பாய்ந்த தாய்

Print Friendly and PDF

மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேனி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் தமிழ் மீராவோடை ஆற்றில் தனது இரண்டு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.


இன்று திங்கட்கிழமை காலை 10.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (03 வயது) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். தாய் உயிர்தப்பியுள்ளார். பிள்ளைகளுடைய சடலங்கள் மீராவோடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மீராவோடை வைத்திய அதிகாரி சுஹைர் தெரிவித்தார்.


இச்சம்பவமானது கணவன் மனைவிக்கிடையிலான குடும்பப் பிரச்சினை காரணமாகவே குறிந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2