எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, October 19, 2014

ஹிரு வலையமைப்பின் தலைவருக்கு அரசாங்கத்திலுருந்து மிரட்டல்

Print Friendly and PDF


ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ஹிரு ஊடக வலையமைப்பின்) தலைவர் ரெய்னோ சில்வாவுக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிரு ஊடக வலையமைப்பு ஊவா தேர்தலின் போது பக்கச்சார்பின்றி செயற்பட்டது. அரசாங்கத்தின் வாக்குகள் குறைவதையும் தெரிவித்திருந்தது, இது தவிர கடந்த தேர்தல்முடிவுகளை தற்போதைய தேர்தல் முடிவகளுடன் ஒப்பீடும் செய்ந்திருந்தது.


இதன் காரணமாக சீற்றமடைந்த அரசாங்கம் ஹிருவின் இணையத்தளத்தில் வெளியான அந்த செய்திகளை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. இது தவிர ஐக்கிய தேசிய கட்சியின் ஹரின் பெர்ணாண்டோவின் விளம்பரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் அரசாங்கத்தை சீற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரெய்னோ சில்வா ஐக்கிய தேசிய கட்சியின் தீவிர ஆதரவாளர். தேற்கின் ரன்மினிதென்ன கிராமத்தில் இடம்பெற்ற கொலைகள் குறித்த செய்தியை வெளியிட்டதற்காக 2007ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் ஒலிபரப்பு உரிமம் இரத்தாகி இருந்தது. ரெய்னோ சில்வாவின் சகோதரர் துமிந்த சில்வா அரசாங்கத்தின் பக்கம் மாறிய பின்னரே ஒலிபரப்பு உரிமம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் சகோதராகள் இருவரும் ராஜபக்ஷ சகோதரர்களின்  நெருங்கிய நண்பர்களானர்.

தற்போது ரெய்னோர் சில்வா மீண்டும் தனது முன்னைய கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்தே அவர் மிரட்டல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

இலங்கையின் முன்னணி வானொலிகளாக விழங்கும் சூரியன் எப்.எம். (தமிழ்), சன் எப்.எம், கோல்ட் எப்.எம் (ஆங்கிலம்), ஹிரு எப்.எம், ஷா எப்.எம் (சிங்களம்) ஆகிய 5 வானொலிகளையும், ஹிரு தொலைக்காட்சியையும் கொண்ட நிறுவனமாக ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விளங்குகிறது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2