Published On: Sunday, October 19, 2014
இஸ்ரேல் பிரதமரை கடத்துவதற்கு திட்டமிருந்த சதாம் ஹுசைன்
முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன், இஸ்ரேல் பிரதமராக இருந்த மெனாசெம் பிகினை கடத்துவதற்கு திட்டமிருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. சதாம் ஹுசைன் ஆட்சியில் இருந்தபோது, 1981ஆம் ஆண்டு ஈராக் அணு உலைமீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தது.
இதற்கு பழிவாங்குவதற்காக சதாம் ஹுசைன் இஸ்ரேல் பிரதமரை கடத்துவதற்கு திட்டமிருந்தார். மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் வற்புறுத்தலை தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை சதாம் ஹுசைனின் சட்டத்தரணி பாடீ ஆரிப் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இப்புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
