எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, October 19, 2014

நோய்வாய்ப்பட்ட முதியவர் நாயினால் குணமடைந்தார்

Print Friendly and PDF

கென்டக்கி நகரத்தில் ஜேம்ஸ் வாட்தன் என்ற 73 வயது முதியவர் உடல் நிலை சரியில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உடல் நிலை முன்னேற்றமில்லை. சரியாக சாப்பிடுவதுமில்லை.


அவரின் செல்ல பிராணியான ஒற்றை கண் நாயை பிரிந்திருப்பதே அவரின் மன உளைச்சலுக்கு காரணம் என்பதை மருத்துவமனையில் அறிந்து கொண்டனர். மருத்துவமனைக்குள் செல்ல பிராணிகளுக்கு அனுமதி இல்லை என்றாலும், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு அனுமதியோடு நாயை அவரின் அறைக்கு கொண்டு வந்தனர்.

முதியவரை கண்ட நாயும் அவர் மீது துள்ளி குதித்து அவர் மேல் புரண்டு விளையாடியது. முதியவரின் கண்களில் மகிழ்ச்சியோடு கண்ணீர் பெருக்கெடுத்தது. இரு உயிர்களின் அன்பில் அறையில் நிசப்தம் நிலவியது. உரிமையாளரான முதியவரை பிரிந்ததிலிருந்து நாயும்  சாப்பிடவில்லை என்ற செய்தி அங்குள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

தற்போது முதியவர் நன்றாக சாப்பிடுவதாகவும், உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2