Published On: Sunday, October 19, 2014
டிரான் அலஸ் மற்றும் அர்ஜூன ரணதுங்க ஐ.தே.க.வில் இணைவு?
ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலில் ஜே.வி.பி. மற்றும் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட அர்ஜூன ரணதுங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன் டிரான் அலஸ் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
பின்னர், இவர்கள் இருவரும் ஜனநாயக தேசியக் கூட்டணியில் இருந்து விலகியதுடன் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கி வருகின்றனர். இந்நிலையிலேயே இவர்கள் ஐ.தே.க.வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
