எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, October 28, 2014

பஷில் ராஜபக்ஷ தலைமையில் வறுமை ஒழிப்பு திட்டம்: ஹிஸ்புல்லா

Print Friendly and PDF


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் பாரிய வறுமை ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பகுதி விளையாட்டு மைதானத்தில் புதிய விளையாட்டரங்கினை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் கூறினார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இங்கு தொடர்ந்து பேசுகையில் 30 வருட கால யுத்தத்தை அனுபவித்த எமது மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். சொந்த வீடுகளைவிட்டு வெளியேறி  வேறு இடங்களில்  வசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்தது.

அண்மைய 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுடாக எதிர்வரும் மூன்று  ஆண்டுகளுக்குள் மக்களின் வருமானத்தை அதிகரித்து வறுமையை ஒழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் வழிசெய்துள்ளது. ஏனைய நாடுகளின் தலைவர்கள் அதிசயிக்கத்தக்க வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களின்  அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் எல்லாத்தரப்பினதும் வறுமையை போக்கி வருமானத்தை அதிகரிக்க இந்த வரவு செலவுத் திட்டம் வழி செய்கின்றது. ஏதிர்வரும் காலங்களில் வெறுமன கட்டிடம்,பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தால் மாத்திரம் முழுமெனே அபிவிருத்தியாகக் கருத முடியாதெனக் கொண்டு நாட்டையும்,வீட்டையும் எதிர்காலத்தில் கட்டியெழுப்ப பாரிய பணிகளை அரசாங்கம் செய்யவுள்ளது.

இதற்கென பாரிய நிதிகளை பிரதேச,மாவட்ட அபிவிருத்திக்கென ஜனாதிபதியின் ஆலோசனையில் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. யுத்த காலத்தில் நிம்மதியிழந்த நமக்கு இன்று அமைதியான சூழலில் வாழ ஜனாதிபதி வழி செய்துள்ளார்.

இந்த அமைதியை குழப்ப சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஒட வேண்டுமென்றே சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன தமிழீழ விடுதலை புலிகளை நமது நாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து நாட்டை குழப்ப ஐரோப்பிய சமூகமும் ஏனைய நாடுகள் சிலவும் முயற்சிக்கின்றன.

இனியும் இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் வருவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை உண்மையான அபிவிருத்தியை காண ஒவ்வொரு வீட்டின் வருமானமும் அதிகரிக்கப்படவேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம்,குடிநீர் ,வீதி அபிவிருத்தி போன்ற பணிகளை செய்ய பெரும் செலவு செய்து வருகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து எமது மக்களின் தேவைகள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காணவிருக்கின்றது என மேலும்  குறிப்பிட்டார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.
இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

குறித்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதுவரை 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2