எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, October 28, 2014

அல்-கிம்மாவினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Print Friendly and PDF


அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியினால் அவர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்ட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காக வருகைதந்த ஜனாதிபதியை முதலமைச்சரின் இல்லத்தில் வைத்து சந்தித்த போதே இம்மகஜர் கையளிக்கப்பட்டது.


கல்குடா தொகுதியில் நீண்டகால குறைபாடாகவுள்ள குடிநீர் இணைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி, மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பிரதேசத்தின் அரசியல் வாதிகளினாலும் சமூக நிறுவனங்களினாலும் குடி நீர் இணைப்பு தொடர்பான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அல்கிம்மா நிறுவனம் நேரடியாக நாட்டின் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

மேலும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, அவசரமாக கல்குடா வாழ் மக்களின் இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதையும் நிறுவனத்தின் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2