Published On: Tuesday, October 21, 2014
ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் புதிய தேர்தல் யுக்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க தான் சந்தித்துவந்த தொடர் தோல்விகளை ஈடுகட்டும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு அங்கமாக தனது பிரசாரப் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாகக கலந்துரையாடுவதற்காக ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியாவின் குறித்த பிரசார நிறுவனத்தின் பிரதானிகள் சிலர் சிங்கப்பூர் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
அத்துடன் ரணிலின் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக இலங்கையிலுள்ள சில வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மகிந்த ராஜபக்ஷவும் இம்முறை தேர்தல் பிரசாரங்களை வித்தியாசமான முறையில் முன்னெடுப்பதற்கு மந்திராலோசனை செய்து வருகின்றார். தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் ஒவ்வொறு இடங்களிலம் ஜனாதிபதி விம்பம் வடிவில் வந்து மக்களிடம் நேரடியாகப் பேசுவது போன்று உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பிரசாரப் பணிகளுக்கு அதிகளவான பணம் செலவாகும் என்பதால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புகள் பல்வேறு கருத்துகள் வெளிவந்துள்ளன. ஆங்கில திரைப்படங்களில் வருவதுபோன்று இந்த தொழில்நுட்பத்தை மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்தினால் அது இலங்கை தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய யுக்தியாக அமையும்.
