Published On: Tuesday, October 21, 2014
பொலநறுவை வானில் பறக்கும் அதிசய நூல்கள் (படங்கள் இணைப்பு)
பொலநறுவை, பெந்திவெ பிரதேச வான்பரப்பில் அதிசயமான நூல்கள் பறந்து திரிவதாக பிரதேசவாசிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு கிலோ மீற்றர் தூரம்வரை நீண்டு காணப்படும் இந்த நூல் மரங்களிடையே சிக்குண்டிருந்ததை அங்குள்ள மக்கள் அவதானித்துள்ளனர்.
அதனை நேரில் அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த நூலை தொடக்கூடியதாக இருந்ததாகவும், அது சிலந்தி வலையை ஒத்த தன்மையுடையதாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் பொலநறுவை வாழ் மக்கள் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இருப்பினும் குறித்த நூல்கள் குறித்து உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.



