எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, October 21, 2014

கொஹுவளையில் பிரித்தானியப் பெண் மீது பாலியல் வல்லுறவு

Print Friendly and PDF

நுகேகொடை, கொஹுவளை பிரதேசத்தில் இயங்கிவரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் தங்குமிடமாக பயன்பட்டுவந்த வாடிவீடொன்றில் பிரித்தானிய பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வார இறுதியில் இந்த வாடிவீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொள்வதற்காக சக நண்பிகளோடு வந்திருந்த குறித்த பிரித்தானியப் பெண் எல்லோருடனும் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய மயக்கநிலையில் அங்கிருந்த ஆசனமொன்றில் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானிக்காத ஏனைய பெண்கள் வேறுதிசைகளில் பிரிந்து சென்றதால் இப்பெண் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டாள். இதனை சாதகமாகப் பயன்படுத்தி வாடிவீட்டு ஊழியரொருவர் அருகே இருந்த அறையொன்று குறித்த பிரித்தானியப் பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(நமது செய்தியாளர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2