Published On: Tuesday, October 21, 2014
இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக ஜோகோ விடோடோ
இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக ஜோகோ விடோடோ நேற்று பதவியேற்றார். இவர் அந்நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாவார். ஜகர்த்தா நகரத்தின் ஆளுநரான ஜோகோ விடோடோ கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் இராணுவத் தளபதி பிரபோவோ சுபியந்தோவை தோற்கடித்து ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
ஆறாவது ஜனாதிபதியாக பணியாற்றிய சுசிலோ பம்பாங் யுதோயோனோவுக்குப் பிறகு ஜொகோவி புதிய ஜனாதிபதியாகிறார். இவரின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
