எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, October 21, 2014

இந்திய படையினரால் கொல்லப்பட்டவர்களின் 27ஆவது நினைவுதினம்

Print Friendly and PDF


இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான யாழ். போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது 


இந்திய அமைதிப்படையினர்  1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேர் பலியாகினர்.


அதில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் பலியாகினர். அவர்களின்  நினைவுதினமே இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

(பாறுக் சிகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2