எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 22, 2014

சரத் என். சில்வாவை நாடு கடத்த வேண்டும்: ஞானசார தேரர்

Print Friendly and PDF

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை நாடு கடத்த வேண்டுமென ஞானசார தேரர் பொதுபல சேனா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து இல்லாமல் போனதற்கு சரத் என். சில்வா வழங்கிய தீர்ப்பே காரணமாகும். அவர் கட்சித் தாவல்களை நியாயப்படுத்தி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் இன்று வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்திருக்கும்.

இவ்வாறான ஓர் நபர் 19ஆம் திருத்தச் சட்டத்தை உருவாக்குவது எந்தளவுக்கு நியாயமானது. அவ்வாறு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் தார்மீக பொறுப்பும் சரத் என். சில்வாவிற்கு கிடையாது.

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரையில் நிறைவேற்று இந்த அதிகாரத்தை ரத்து செய்யக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட முடியாதெனவும், அவ்வாறு போட்டியிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் சரன் என். சில்வா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2