Published On: Saturday, August 22, 2015
அடுத்த 2 ½ வருடங்களுக்கு தேசியப்பட்டியல் அம்பாறைக்கு கிடைக்கும் என்கிறார் மாநகரசபை உறுப்பினர் -முபீத்
தேசியப்பட்டியல் விடயத்தை ஊதிப்பெருபித்து எங்களுக்குள் பிரச்சினைகள் இருப்பதாக காட்டி மக்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை தவறாக சித்தரிப்பதற்காக பல்வேறு சதிநடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கல்முனை மாநகரசபையின் உறுப்பினரும் சதொச நிறுவனத்தின் பணிப்பாளருமான சீ.எம். முபீத் தெரிவித்தார்.
குறித்த தேசியப்பட்டியல் விடயத்தில் தலைவர் றிசாத் பதியூதீன் அவர்கள் எடுத்த முடிவு நியாயமானது என்றும் தலைவரையும் கட்சியையும் நம்பி வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்றும் சில தவிர்க்கமுடியாத முக்கிய தேவைகளின் காரணமாகவே முதல் 2 ½ வருடங்களுக்கு மட்டுமே தேசியப்பட்டியல் புத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 2 ½ வருடங்களுக்கு நிச்சயமாக இப்பதவி அம்பாறை மாவட்டத்தை வந்தடையும் என்றும் தெரிவித்தார்.
கட்சியின் செயலாளர் அவர்கள் சற்றுப் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முபீத் அம்பாறை மாவட்ட மக்களின் ஆதங்கங்களை கட்சி நிறைவேற்றும் என்றும் தெரிவித்ர். ஏற்பட்டுள்ள சிறிய முரண்பாடுகளைக் கண்டு மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் வேண்டிக்கொண்டார்.
தொடர்ந்தும் கட்சியுடனும் தலைமையுடனும் இணைந்திருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக நமது பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கு மனக்கசப்புகளைக் களைந்து சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
-எம்.வை.அமீர் –