எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, August 22, 2015

பொய் அறிக்கைக்கு மறுப்பபு கலீலுர் ரஹ்மான்

Print Friendly and PDF

புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு அம்பாரை மாவட்டத்தின் 10 வேட்பாளர்களுடனும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துரையாடியதாகவும் அதற்கு நாங்கள் 10 பேரும் சம்மதம் தெரிவித்ததாகவும் பூமுதீன் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடு்டுள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யாகும்.

முதலாவது 10 வேட்பாளர்களும் கூட்டாக எந்த அறிக்கையையும் விடவில்லை. இரண்டாவது அமைச்சர் றிஷாட் பதியுதின் புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கவது தொடர்பாக என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. அதேநேரம் நான் அறிந்தவரையில் வேறு வேட்பாளர்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. நாம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவுமில்லை.

அம்பாரை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்குகள் வழங்கிய மக்களை அநாதைகளாக தவிக்க விட்டு புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கவதற்கு சம்மதம் தெரிவிக்கும் அளவு நானோ அல்லத நான் அறிந்தவரையில் எனது சக வேட்பாளர்களோ வங்குரோத்து நிலையில் இல்லை. அதே நேரம் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் மீது திட்டமிட்டு யாருடையதோ துாண்டுதலின் பேரில் அவர் கடந்த தேர்தலில்  பெரிதாக வேலை செய்யவில்லை என்றும் தேர்தல் தினத்தன்று 4 மணிக்கே கொழும்பு திரும்பிவிட்டார். என்றும் அவர் தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய்யும் முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனைவதுமாகும்.

செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இத்தேர்தலில் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்தார் என்பது எனக்கு மாத்திரமல்ல அம்பாரை மாவட்டத்திலுள்ள அத்தனை கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தெரிந்த விடயமாகும். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடந்து 2 நாட்களுக்குப் பின்னர்தான் கொழும்புக்கு அவர் சென்றார் என்பது நான் மட்டுமல்ல கட்சியில் இருக்கின்ற பலருக்கும் தெரிந்த விடயமாகும்.

எனவே யாரையாவது திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான சின்னத்தனமான அறிக்கைகளை விடுவதை பூமுதீன் அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பதோடு இவ்வாறான அசிங்கமான பொய் அறிக்கைகளுக்கு வேட்பாளர்களையும் துணைக்கு அழைப்பதை கண்டிக்கின்றேன். என்று தேர்தலில் 7 ஆம் இலக்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)   

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2