Published On: Tuesday, August 11, 2015
செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, அமெரிக்கா செல்ல உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி நடவடிக்கைகள் 2015 என்ற தலைப்பில் உச்சி மாநாடு செப்டம்பர் 25 ஆம் தேதி, தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் மோடி25ம் தேதி மாநாட்டில் உரையாற்றுகிறார். 28ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசுகிறார். மேலும் இணையதள நிறுவனமான கூகுள் அலுவலகங்களை சென்று பார்வையிட உள்ளதகாவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடன் அமெரிக்கா செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செப்டம்பர் 28 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி நடவடிக்கைகள் 2015 உச்சி மாநாட்டின் பொது விவாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, அமெரிக்கா செல்ல உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி நடவடிக்கைகள் 2015 என்ற தலைப்பில் உச்சி மாநாடு செப்டம்பர் 25 ஆம் தேதி, தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் மோடி25ம் தேதி மாநாட்டில் உரையாற்றுகிறார். 28ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசுகிறார். மேலும் இணையதள நிறுவனமான கூகுள் அலுவலகங்களை சென்று பார்வையிட உள்ளதகாவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடன் அமெரிக்கா செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செப்டம்பர் 28 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி நடவடிக்கைகள் 2015 உச்சி மாநாட்டின் பொது விவாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.