Published On: Wednesday, August 12, 2015
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீறாவோடை பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு மீறாவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இருந்த இளைஞர்களை வாகனத்தில் வந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு வாகனத்தில் வந்ததாகவும், அதில் ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தங்களை தாக்கியதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் மீறாவோடை பிரதான வீதியைச் சேர்ந்த ஏ.எஸ்.பைரூஸ் (வயது - 36) மற்றும் மீறாவோடை ஹாஜியார் வீதியை சேர்ந்த எம்.எச்.பௌசான் (வயது - 28) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
இவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்
