Published On: Thursday, August 13, 2015
பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்" நூல் வெளியீடு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கடந்த 19 வருடங்களாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பு நூலான ' "பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்" எனும் நூல் வெளியீடு நிகழ்வு நேற்று
புதன்கிழமை மாலை (12) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி ஏ.எம். றஷ்மி தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் பிரமத அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
நூல் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான எஸ். சதீஷ்குமார் வழங்கியதோடு நூல் விமர்சன உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் வழங்கினார்
சிறப்புரையை தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியை தெ. செந்தில்வேலவர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் கல்வியாளர்கள் மார்க்க அறிஞர் கள் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )

