Published On: Wednesday, August 05, 2015
தபால் மூல வாக்களிப்பு
(ஹாசிப் யாஸீன்)
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றது.
அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களது தபால் மூல வாக்குகளை இன்று பிரதேச செயலகத்தில் அளித்தனர்.
இதன்போது பிரதேச செயலக உத்தியோத்தர்கள் தங்களது வாக்குகளை மிக ஆர்வத்துடன் அளித்தனர்.


