Published On: Saturday, August 22, 2015
பிரதேச வாதம், ஊர்வாதம், ஊருக்கு எம்.பி என்ற வாதங்களையெல்லாம் தாண்டி வாக்களித்த மக்களின் உணர்வை மெச்சுகின்றேன் - ஹரீஸ் எம்.பி
கட்சியின் இருப்பையும், மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பதற்கு ஒன்றுதிரண்டு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களின் சமூக உணர்வை மெச்சுகின்றேன் என நடைபெற்ற முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்; தெரிவித்தார்.
நடைபெற்ற முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எச்.எம்.எம்.ஹரீஸ_க்கு கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்களால் நேற்று மாலை (18) செவ்வாய்க்கிழமை பெருவரவேற்பளிக்கப்பட்டது. இதில் பெருந்திரளான இளைஞர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல், கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் என்பவற்றில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டார். இதன்போது வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக காணப்படும் அம்பாறை மாவட்டமும், கட்சியி;ன் கோட்டையாக வர்ணிக்கப்படும் கல்முனைத் தொகுதி, அதிலும் குறிப்பாக சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸின் மரம் அடியோடு பிடுங்கி எரியப்படும் என தேர்தல் கால மேடைகளில் எதிரணியினர் கூக்குரலிட்டனர்.
ஆனால் அம்பாறை மாவட்ட கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள் இத்தேர்தலில் கட்சியையும், மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாத்து வாக்களித்தது மட்டுமல்லாமல் எமது கட்சித் தலைமையின் அம்பாறை மாவட்ட தேர்தல் வியூகத்தையும் வெற்றியடையச் செய்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
அம்பாறை மாவட்ட மக்கள் பிரதேச வாதம், ஊர்வாதம், ஊருக்கு எம்.பி என்ற வாதங்களையெல்லாம் தாண்டி, தனி;பட்ட விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எனக்கு வாக்களித்து மூன்றாவது முறையாகவும் பாhராளுமன்றத்திற்கு தெரிவு செய்து கெட்றிக் சாதனை படைக்க உதவிய மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு குறிப்பாக கல்முனைத் தொகுதி மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இவ்வெற்றியின் பங்காளர்களான கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வெற்றியினூடாக எமது மக்கள் வேண்டி நிற்கும் அபிவிருத்திகளையும், அபிலாஷைகளையும் குறிப்பாக கட்சியை பாதுகாப்பதற்காக முன்னின்று உழைத்த இளைஞர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றித் தர பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)
