Published On: Saturday, August 22, 2015
ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக Nகுபுபு சத்தியாக்கிரக போராட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹிவிற்கு எதிராக இன்று காலை 10.30
மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது அவரின் ஆதரவாளர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனைக் கண்டித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
