Published On: Saturday, August 22, 2015
மட்டக்களப்பு பிரான் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் மரணம்
மட்டக்களப்பு பிரான் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிரதேச சபை வீதியைச் சேர்ந்த முகமட் சாஹிப் பாத்திமா மௌபியா (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் கிரான் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலாவிற்காக சென்றவேளை வீதியின் குறுக்கே காணப்பட்ட பள்ளத்தில் தாங்கள் பயணம் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததினால் பின்னால் இருந்த குறித்த நபர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவரை வாழைச்சேனை பொலிசார் தடுத்து வைத்து விசாரணகளை மேற்கொண்டுள்ளனர். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்
