Published On: Friday, August 21, 2015
டெல்லியில் மோடியுடன் வங்காளதேச வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்தார். ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் சவ்ரா முகர்ஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஹசினாவுடனான இந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் வங்காளதேசத்தில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஹசினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது வரலாற்று சிறப்பு மிக்க நில எல்லை ஒப்பந்தம் உள்ளிட்ட 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
(திருச்சி - சாகுல் ஹமீது)


