Published On: Friday, August 14, 2015
(அம்பாறை) (தேர்தல் செய்தி) மாபெரும் தேர்தல் பிரச்சார நிகழ்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்த தேர்தல் பிரச்சார மாபெரும் பொதுக்கூட்டம் அட்டாளைச்சேனை லக்கி ஸ்ட்டோர் சந்தி பிரதான விதிக்கு அருகாமையில் நேற்றிரவு வியாழக்கிழமை (13) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ் ஏ.எஸ்.எம்.உவைஸ் ஐ.எல்.முனாப் கலீல் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர் கட்சியின் உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி அட்டாளைச்சேனை மத்திய குழுவின் பொருளாளர் ஏ.எல்.பத்தாஹ் உள்ளிட்ட பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எமது கட்சிக்கும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று வேட்பாளர்களுக்கும் இத்தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது கட்டாயம் பார்ளு ஆகும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து அதிதிகளினாலும் எடுத்துக் கூறப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.
அபு அலா -