எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, August 22, 2015

இஷாக் ஹாஜியார் என்­பவர் யார்?

Print Friendly and PDF

 இஷாக் ஹாஜியார் என்­பவர் ஒரு சா­தாரண மனிதர். சமூக அக்­கறை கொண்ட ஒரு பிரபல தொழில் அதிபர் சமூக சேவகர் அனுராதபுர மாவட்டத்தில் கலாவவ தேர்தல் தொகுதியில் கலாவவ கிராமத்தில் பிரந்தவன் தனது தந்தைக்கு பிரகு அவரது நாபகமாக இஷாக் ரகுமான் பவுன்டேச்ன் ஆர்ம்ம்பிகப்பட்டது அதன் முத்ல் கட்டமாக அனுராதாபுரம் வைத்தியசாலைக்கு சிறுநீரக பிரிவுக்கு  10 லச்சம் தனது செந்த பணத்தில் நன்கொடை செய்த்தவர் சமூகதுக்கு நாம் இருக்கும் போது நம்மால் முடிந்த சேவகளை செய்ய விரும்மும் மனிதர் அரசியலுக்கு வரும் முன்னரே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர்தான் இஷாக் ஹாஜியார்


உங்கள்  நாடாளுமன்ற பிரவேசத்தின் நோக்கம் என்ன?

அநுராதபுர முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் கனவு நிஜமாகியது
அல்ஹம்துலில்லா  இது வரை காலமும் நடந்த பொது தேர்தல்களில் எம்மால் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்ளமுடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம். சுமார் 50-60 ஆயிரம் முஸ்லிம் வாக்கு வங்கியை கொண்ட எமது மாவட்டத்தில் குறைந்தது 30 ஆயிரம் வாக்குகளையாவது ஒருவருக்கு அளித்து எமக்கான பிரதிநிதியோன்ரை தெரிவு செய்ய முடியாதவர்களாக ஆகிவிட்டோம் . இல்லை இல்லை ஆக்கப்பட்டு விட்டோம். ஆகவே இவ்வளவு காலம் காத்த்து போதும் இனி இவ்வாரானன் சந்த்ர்பம் அமையாது அத்துடன் அனுராபுர முஸ்லீம் ம்க்களுடைய பிரச்சனைகள் மட்டும் அல்லாது சகல இன் மத வேதம் இன்றி சேவை செய்ய வேன்டும் என்பது எனது நேக்கமாகும் அத்துடன் ஒரு நல்ல சமூக சேவகர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு அது இப்போது நனவாகி உள்ளது

உங்களுக்கு அதிகமான சிங்கள மக்களிடத்திலும் செல்வாக்கு உள்ளதாக தெரிகிறதே?

ஆம் அது உண்மைதான். சிங்கள மக்கள் என்னை அவர்களின் சகோதரனாக பார்க்கிறார்கள். தினமும் பௌத்த குருமார் என்னைச் சந்தித்து எனக்கு வாக்கு சேகரிப்பதில் அலாதியான  பிரியத்துடன் செயற்பட்டனர் . அதுபோலதான் நமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து சிங்கள சகோதரர்களும் களத்தில் வேலை செய்தனர்

நீங்கள்  அனுராதபுரம் மாவட்டத்தில் பரந்து வாழும் மக்களுக்கு எவ்வாறான சேவைகளைச் செய்வதற்குதிட்டமிட்டுள்ளீர்கள்?

நான் தேர்தலில் களமிறங்கிய நோக்கம் சமூகதிற்கு சேவை செய்ய வேண்டுமென்பதே தவிர உழைப்பது அல்ல. அத்தோடு சமூகத்திலுள்ள பல்வேறுபட்டவர்களின் அழுத்தமே என்னை இந்தத் தேர்தலில் களமிறங்க வைத்தது. எனது பிரதான குறிக்கோள் எமது மாவட்டத்தில் ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்குவதாகும். அந்த வகையில் அனுராதபுரத்தில் ஒரு கல்விப் பரம்பரையின் தேவையை நான் உணர்கிறேன். அதற்காக சகல வளங்களையும் உள்ளடக்கியதாக மாணவர்களுக்கான தனியான ஒரு பாடசாலையையும் மாணவிகளுக்கான தனியான ஒரு பாடசாலையையும் விடுதி வசதிகளுடன் உருவாக்கும் எண்ணம் என்னிடம் உள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறை ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளின்மை என்பவற்றை எனது நேரடிப் பார்வையில் இன்ஷா அல்லாஹ் நிவர்த்தி செய்து வைப்பேன்.

அத்தோடு முஸ்லிம்களுக்கான ஒரு கலாசார மண்டபம் கஷ்டப் பிரதேசங்களுக்கான வைத்தியசாலை வசதி போன்றவற்றை அமைக்கும் திட்டமும் உள்ளது. எமது மாவட்டத்தில் படித்த இளைஞர்-யுவதிகளுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்படுவேன்.

தமிழ் மொழி மூலமான தொழிநுட்பக் கல்லூரி ஒன்றை அமைத்து தொழிற் பயிற்சி வழங்குவதற்கு ஆவன செய்வேன். சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி பெண்கள் விதவைகள் தொழில் வாய்ப்பைப் பெற தகுந்த வசதிகளைச் செய்து கொடுப்பேன்.

நீங்கள் அகில இலங்கை மக்கள் கங்ரஸ் உடன் இனைந்து செய்ல் படுவதுக்கான காரனம் என்ன?

அமைச்சர் றிஷாட் ஒரு நல்ல மனிதர் யார் உதவி என்று கேட்டு வந்தாளும் அவரால் முடிந்த உதவிகளை செய்பவர் அவர் தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு முஸ்லீம் அமைச்சர்களில் அதிகமாக  சேவை செய்தவர் இன மத வேற்றுமகள் எதுவும் பாக்காமல் உதவி செய்பவர்

அவருடன் இணைந்து செயல் பட்டால் அவர்களுடன் சேர்து

எனைனை நம்பி வாக்களித்த சகளுக்கும் என்னால் முடித உதவிகளை இலகுவாக செய்யலாம் 

இறுதியாக அனுராதபுர மாவட்ட மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 நான் இதே இஷாக் ஹாஜியார்தான். நான் மந்திரி இல்லை மக்கள் சேவகன். இதுதான் எனது நிலைப்பாடு. எப்போதும் போலவே மக்களோடு மக்களாக வாழவே நான் ஆசைப்படுகிறேன். நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் இந்த மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்


நேர்காணல் கே.அஸீம் முஹம்மத்

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2