Published On: Saturday, August 22, 2015
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை தடுக்கும் வீதிப்பேரணி
கோறளைப்பற்று தெற்கு பிரதேச மட்ட சிறுவர் சபையினால் ஈஎஸ்சீஓ நிறுவனத்தின் அனுசரணையுடன் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை தடுக்கும் வீதிப்பேரணியொன்று மட்டக்களப்பு கிரான் சந்தியில் நடைபெற்றது.
பிரதேச மட்ட சிறுவர் சபையின் தலைவர் வி.எழில்ராஜ்; தலைமையில் நடைபெற்ற இந்நிகவில் பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பல்வோறு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு சுமார் நூறு மீற்றர் தூரம்வரை வீதியில் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சிறுவர் கழக உறுப்பினர்கள், பிரதேச செயலக சிறுவர் கழகங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.
பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம் இங்கு உரைநிகழ்த்துகையில் எமது செல்வங்களான சிறுவர்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டிய பெற்றோர்;, பாதுகாவலர்கள், மற்றும் ஏனையவர்கள் தங்களது கடமைகளை செய்யாமல் புறக்கணித்தல், பெற்றோர்களின் பரிவு, பெற்றோர்களின் போதைவஸ்து பாவனை, இளவயதுத்திருமணம் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் போன்ற காரணங்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றமை மனவேதனைக்குரிய விடயம் என்றார்;.
கிரான் பிரதேசத்தில் காணப்படும் சிறுவர் துஷ்பியோகங்களை தடுக்கும் வழிமுறைகள் நாடகம் மூலம் நடித்து காட்டப்பட்டது.
(ஏறாவூர் ஏஎம் றிகாஸ்)
