எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 21, 2015

இலங்கையில் நடக்கும் தொல்பொருள் ஆய்வுகளை, இந்தியாவின் இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வெளிப்படைத் தன்மை தேவை

Print Friendly and PDF

இலங்கையில் நடக்கும் தொல்பொருள் ஆய்வுகளை, இந்தியாவின் இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள, வெளிப்படைத் தன்மை தேவை என, தமிழக நாணயவியல் கழக தலைவர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் மற்றும் நாணயவியல் ஆய்வுகள் தொடர்பான இந்திய - இலங்கை கடல்வழி உறவுகள் குறித்து, சென்னையில் கருத்தரங்கு நடந்தது. இதில், கடல் வாணிபம் குறித்த தொல்பொருள் மற்றும் நாணயவியல் ஆய்வுகள் குறித்து, தமிழகநாணயவியல் கழகத் தலைவர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:சர்வதேச அளவில், தொல்பொருள் மற்றும் நாணயவியல் ஆய்வில் பெயர் பெற்ற ஆஸ்மன்ட் போபியார்ச்சி, இந்த கருத்தரங்கில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், எனக்கு, 20 ஆண்டு கால நண்பர். 'கடல் வாணிபத்தில், இந்தியா - இலங்கை இடையிலான புதிய ஆதாரங்கள்' என்ற தலைப்பில், தமிழ்நாடு நாணயவியல் கழகம் சார்பில், 2004ல், சென்னையில்

அதில், ஆஸ்மன்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆராய்ச்சி மாணவர் பலர் பங்கேற்றனர். 'பண்டைய இந்திய நாணயங்கள்' என்ற பெயரில், 300 நாணயங்களின் படங்களுடன் அவர் எழுதிய புத்தகம், நாணய ஆய்வில் அதிக பயன்தரக்கூடியது. அதை நான் தினமும் பயன்படுத்தி வருகிறேன்.இந்தியாவும், இலங்கையும் பல நுாற்றாண்டுகளாக சிறந்த நட்புறவுடன் இருந்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சிங்களர்களும், தமிழர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். இலங்கையிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில், ஏராளமான தமிழ் நாணயங்கள் உள்ளன.

கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட,'ரோமன் செப்பு' நாணயங்கள் குறித்து புத்தகம் எழுத, நான், இலங்கைக்கு சென்றபோது, அதேபோன்ற நாணயத்தை இலங்கை தேசிய அருங்காட்சியகத்தில் பார்த்தேன். ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ஒரு நாள், அந்த அருங்காட்சியக காப்பாளர் செனார்த் விக்ரமசிங்கே, ஒரு அழுக்கடைந்த பார்சலை என் மேஜை முன் வைத்தார். 40 ஆண்டுகளாக திறக்கப்படாத அந்த பார்சல், நாணயம் சேகரிக்கும் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

நான் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். அதில், சங்க கால பாண்டிய மற்றும் சோழர் காலத்தின் அரிய வகையிலான, 70 நாணயங்கள் இருந்தன. பொதுவாக, இலங்கையிலுள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியர்களிடம் காட்டப்படுவது இல்லை. அதனால், இலங்கையில் தொல்பொருள் மற்றும் நாணயங்களின் கண்டுபிடிப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு, ஆஸ்மன்ட் போபியார்ச்சி உதவி செய்து, இந்தியாவின் இளம் ஆய்வாளர்கள், இலங்கையிலுள்ள பழைய ஆவணங்களை பார்க்க உதவுவார் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில், 'ரீச்' அறக்கட்டளை இயக்குனர் டி.சத்தியமூர்த்தி பேசியதாவது:பண்டைய கால வர்த்தக, கலாசார தொடர்புகளை அறிய, பண்டைய கால நாணயங்களின் கண்டுபிடிப்பு பெரும் உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு கலாசாரத்தின் காலத்தையும், துல்லியமாக கண்டறிய நாணய ஆய்வுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சங்ககால வரலாற்றைக் கூறும் நாணயங்களை, நாணயவியல் கழகத் தலைவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்தார். இது சங்ககால ஆய்வில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நாணயங்கள் மூலம், இந்திய வரலாறு மட்டுமின்றி, சங்க காலத்தில் இலங்கை - இந்திய நட்புறவுகள் குறித்து தெளிவாக அறிய முடிகிறது. இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்த நாணயங்களை வைத்து, இலங்கையில் புதிதாக தொல்பொருள் ஆய்வுகள் துவங்கியுள்ளன.இலங்கையில், கொதவாய கடலுக்கடியில் கண்டறியப்பட்ட, பண்டை கால கப்பலின் பாகங்கள் குறித்த ஆஸ்மன்டின் தகவல்கள், தற்போதைய கடல்வழி மாலுமிகள் மற்றும் பொறியாளர்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வர பேருதவியாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

(திருச்சி - சாகுல் ஹமீது)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2