Published On: Friday, August 14, 2015
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா பயணியிடம் நாய் தோல்-நகத்தை, புலியின் தோல்- நகம் என நம்பி ஏமாந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா பயணியிடம் சிக்கியது புலிப்பாதம் மற்றும் புலி நகங்களா என வனத்துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்படத்தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சுப்பையா என்பவரின் உடமைகளுக்குள் வித்தியாசமான பொருள் இருப்பதாக ஸ்கேனர் கருவி மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து சுங்கத்துறையினர் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபோது, புலியின் நகங்களுடன் பாதம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறையினரிடம் புலிப்பாதம் மற்றும் அவற்றை கொண்டு செல்ல முயன்ற பயணி ஆகியோரை சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர். மாவட்ட வன அலுவலர் சதீஸ், வனச்சரக அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட சோதனையில் அவை புலியின் பாதமோ நகமோ கிடையாது. நாயின் நகங்களை வெட்டி புலியின் பாதம்போல செட்டப் செய்திருந்தது தெரியவந்தது. அதனை கொண்டு செல்ல முயன்ற பயணியிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுற்றுலா சென்ற போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நரிக்கொம்பு, புலி நகம் மற்றும் பல்வேறு வன உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாகவும், அதில் புலி நகம் எனக்கூறியதால் ரூ.7,000 கொடுத்து இதனை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், அது குறித்து மேலும் சோதனை நடத்த சென்னைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தனர்.
குமரன் சுப்பையா புலியின் தோல், நகம் என கூறியவற்றை, வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்து விட்டு, அவை உண்மையான புலித்தோலோ, புலிநகமோ அல்ல என்றும் இது ஒருவகையான காட்டு நாயின் தோல், மற்றும் நகம் என்றும் அதில் பெயிண்ட் அடித்து ஏமாற்றி இருப்பதாகவும் கூறினார்கள். அப்போது தான் குமரன் சுப்பையா புலிநகம் என வாங்கி தான் ஏமாந்ததை உணர்ந்தார். புலிநகம் இல்லை என்பதால் குமரன் சுப்பையாவை அதனை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக வனத்துறையினராலோ அல்லது போலீசாராலோ கைது செய்ய முடியவில்லை. நாய்த்தோல் மற்றும் நகம் வைத்திருப்பது குற்ற நடவடிக்கையில் வராது என்பதால் குமரன் சுப்பையாவை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.