Published On: Sunday, August 09, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாடு -படங்கள் இணைப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வாழைச்சேனை வீ.சி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
மு.காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அபு அலா -