எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, August 09, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழைச்சேனை மாநாட்டின் நிறைவேற்றிய பிரகடனங்கள்

Print Friendly and PDF

சாய்ந்தமருது  பிரதேசத்துக்கான  தனியான  நகரசபையை  தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவோம் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சிமாநாட்டில் தீர்மானம்  




ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சிமாநாடு 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வெள்ளிக்கிழமை கல்குடா மண்ணில் வாழைச்சேனை ஏ.ஊ பொது விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீ.மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும்இ கிழக்குமாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்  தலைமையில் இடம்பெற்றது. இங்கு பெரும் திரளாக கலந்து கொண்டுடிருந்த கட்சி ஆதரவாளர்களால் மிக முக்கிய ஐந்து தீர்மானங்களை தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றினர்.

தீர்மானங்கள்

1. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ரீதியான தனித்துவமான தேசிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பாரம்பரியமாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் வடகிழக்கு மாகாணங்களில் அவர்களது இருப்பையும் நில உரிமைகளையும் பாதுகாப்பதற்கான வழிவகைகளை நிலை நாட்டுவதற்காகவும் நமது கட்சி தொடர்ந்தும் சாத் வீகமாக போராடவேண்டும்.

2. வடகிழக்கு மாநிலத்தில் வாழும் இனங்களுக்கிடையிலான இனப் பிரச்சினைக்கான தீர்வை முழுமைப்படுத்தும் போது இங்குவாழும் முஸ்லிம் சமூகம் தனித்துவமான ஒரு இனமாக அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சமபல அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

3. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை இல்லாது ஒழிப்பதற்காகவும் இந்நாட்டின் மத்தியில் பிளவுபடாத ஒற்றை ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காகவும் மாகாணங்களுக்கு உறுதியளிக்கப் பட்டவாறு பூரணஅதிகாரப் பரவலாக்கலை பெற்றுக் கொள்ளுவதற்காகவும் எமது கட்சிதொடர்ந்தும் போராடவேண்டும்.

4. முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் அவர்களது பாராளுமன்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதித்துவங்களை இனப்பரம்பலுக்கு ஏற்பபெற்றுக் கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தும் நமது கட்சி மேற்கொள்ளவேண்டும்.

5. கோறளைமத்தி வாழைச்சேனைக்கான தனியான பிரதேசசபையையும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான நகரசபையையும் தோப்பூருக்கான தனியான பிரதேசசெயலாளர் பிரிவையும கிண்ணியா குறுஞ்சாக்கேணிக்கான தனியான பிரதேசசெயலாளர் பிரிவையும் மூதூர் பிரதேசத்திற்கான தனியான நகரசபையையும் மூதூர் பிரதேசத்திற்கான தனிவேறான பிரதேசசபையையும் தற்போதைய குச்சவெளி பிரதேசசெயலாளர் பிரிவிலிருந்து பிறிதான புல்மோட்டை பிரதேசசெயலாளர் இநிறுவுவதற்கான நடவடிக்கைகளை பொதுத் தேர்தல் முடிந்தகையோடு பூரணப்படுத்துவதற்கு கட்சி சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
               
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டு பங்குகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களால் தக்பீர் முழக்கத்துடன் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

எம்.வை.அமீர்-

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2